பனியன் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருக்குமரன் நகர் பகுதியில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தனபாக்கியம் வழக்கம்போல் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டிலுள்ள மற்றறொரு அறையில் ராஜவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனபாக்கியம் பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.