சூதாடிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலை இரயில் நிலையம் அருகில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் செல்வராஜ், சிவா, கதிர்வேல், தர்மராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரத்து 990 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.