Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜா என்னை அடித்தார்”…. பேட்டியில் கூறிய பிரபல நடிகை…. யார் தெரியுமா…???

நடிகை பிரியாமணி முதல் படத்தில் நடந்தைக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் நடிகையாக வலம் வரும் பிரியாமணியின் முதல் படம் “கண்களால் கைது செய்”. இப்படத்திற்கு அடுத்து 2006ஆம் வருடம் “பருத்திவீரன்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக பிரியாமணி தேசிய விருதை பெற்றுள்ளார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். மேலும் பிரியாமணி “தி ஃபேமிலி மேன்” சீரியலிலும் நடித்து உள்ளார்.

தற்போது பிரியாமணி ஒரு  பேட்டியில் கூறியததாவது, “தனது முதல் படமான “கண்களால் கைது செய்” படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கினார். அதில் நடிக்கும் பொழுது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. காரணம், பாரதிராஜா அவர்கள் எளிதில் கோபப்படுவார். ஏனென்றால் அவர் திரைப்படம் நன்றாக அமைய வேண்டும். முன்னணி நடிகைகளான ராதா, ராதிகா உள்ளிட்டோர் பாரதிராஜாவிடம் அடிவாங்கி உள்ளார்களாம். அவர் அடித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என கூறுவார்கள். இருப்பினும் நான் அடி வாங்க கூடாது என எண்ணினேன். ஆனால், நானும் பாரதிராஜாவிடம் ஆடி வாங்கியுள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |