Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எந்த பெண்ணும் சம்மதிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எந்த பெண்ணும் ராஜாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |