திரைப்படங்களின் அப்டேட்கள் தள்ளி வைப்பால் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் “கனா” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கனா படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். கனா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது அருண்ராஜா ஹிந்தி படமான “ஆர்டிகள் 15”-யை தமிழில் டப்பிங் செய்து இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். போனிகபூர் இத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பெயரான “நெஞ்சுக்கு நீதி” என்பது வெளியானது. படத்தின் பெயரானது கலைஞரின் புத்தகத்தின் பெயராக இருப்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த வேளையில் நேற்று வெளியாகவிருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுவால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூரின் மற்றொரு படமான வலிமை கொரோனா தாக்கத்தின் காரணமாக அப்டேட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
— Boney Kapoor (@BoneyKapoor) February 6, 2022