4 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தடகள வீரர் ஒருவர் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும்போது வழி தவறி சென்ற சம்பவம் தொடர்புடைய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
உலகச் சாம்பியன் பட்டத்தை 4 முறை வென்ற 31 வயதுடைய தடகள வீரரான போரிஸ் ஓரவேவ் பால் குளிர்ந்த நீரில் தனது நீச்சல் திறமையை காட்ட முயன்றுள்ளார். ஆனால் போரிஸ் ஓரவேவ் தனக்கான வழியை மறந்து திசைமாறி சென்றுள்ளார். அதன்பின்பு போரிஸ் பனிக்கட்டியினுள் தனது வழியை கண்டுபிடிக்க போராடியுள்ளார்.
இதனைக் கண்ட அவருடைய குழுவினர்கள் போரிஸின் நிலைகுறித்து பயங்கரமாக பீதியடைந்துள்ளார்கள். இதனையடுத்து இறுதியாக போரிஸ் தனக்கான வழியை கண்டறிந்து தான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்துள்ளார். இது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது .