Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விவசாயத்திற்கு தமிழக மின்வாரியம் இலவசமாக மின் இணைப்பு வழங்கி வருகிறது. ஆனால் மின் இணைப்பு குறித்த காலத்தில் வழங்குவதில்லை. எனவே மின் இணைப்புக்கு விண்ணப்பித்த பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்வாரியம் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு தயார் நிலையில் இருக்குமாறு நோட்டீஸ் அனுப்பும்.

அந்த வகையில் திருச்சியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் உள்ள தனது நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு கீரனூரில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு 2010-ஆம் ஆண்டில் தயார் நிலையில் இருப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பு உரிய நேரத்தில் வழங்காததால் பாதிக்கப்பட்ட கண்ணன் இதுகுறித்து புதுக்கோட்டை மின் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க மறுத்த கண்ணன் மேல்முறையீட்டுக்காக ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்குறை தீர்ப்பாளரிடம் சென்றார். அப்போது புகாரை விசாரித்த குறைதீர்ப்பாளர் தேவராஜன், “விண்ணப்பதாரர் மின் இணைப்பிற்கு முன்பு தன்னுடைய தயார் நிலையை பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு அவகாசமாக 90 நாட்கள் வழங்கப்பட்டு அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகள் கடந்த விவசாய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

அதேசமயம் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது குறித்து விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் மேல்முறையீட்டாளர் கண்ணனின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகவோ அல்லது இதுகுறித்த அவருக்கு தெரியப்படுத்தியதற்கான எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே மேல்முறையீட்டாளருடைய விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படாது.

தற்போது அவருக்கு மின் இணைப்பை வழங்க மறுப்பது ஏற்கமுடியாத ஒன்று. அதேபோல் புதிய விண்ணப்பம் மறுபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் மேல்முறையீட்டாளர் தற்போது இருந்து 15 ஆண்டுகள் மின் இணைப்பு பெறுவதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் இது சாதாரண விவசாயிக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே 1995-ஆம் ஆண்டு பதிவு எண்ணின் படி தேவைப்படும் ஆவணங்களை பெற்று விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். அதேபோல் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |