தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக பெறலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது குறித்த முழுவிபரம் பின்வருமாறு, தமிழக அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக கிடைக்கும். இரண்டாவது திட்டத்தில் இரண்டு பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் ஒரு குழந்தைக்கு தலா 25 ஆயிரம் என்ற அடிப்படையில் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் 5 வயது வரை மாதம் 150 ரூபாய் என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும் குழந்தைகளுக்கு 18 வயது வரும்போது இந்த தொகை கைக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். அதோடு அந்த குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. பெற்றோர்களில் இருவரில் ஒருவர் 35 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தையோ அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். தகுதியுடைய பெற்றோர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.