Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க தான் வின் பண்ணிருப்போம்!…. “எங்கள தோக்க வச்சது இது ஒன்னு தான்”…. பொல்லார்ட் அதிரடி பேட்டி….!!!!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் பொல்லார்ட், “22 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் தோல்வியை சந்தித்தது மாபெரும் தோல்வி தான். அனைவரும் இன்னும் கடினமாக உழைத்தால் வெற்றியை பெற முடியும். கடைசி நேரத்தில் பாபியன் ஆலன், ஹோல்டர் ஆலோசித்து ஓரளவுக்கு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி பவுலர்களும் நெருக்கடி கொடுத்தனர்.

பெரிய ஸ்கோர் அடித்திருந்தால் நிச்சயமாக முடிவு எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கும்” என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த போட்டியில் டாஸ் தான் வெற்றியை தீர்மானித்தது. நாங்கள் டாஸில் வென்றிருந்தால் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக இருந்திருக்கும். இரவு நேரங்களில் பேட்டிங் தான் சிறப்பாக செய்ய முடியும். இனி வரும் போட்டிகளில் தவறுகளைத் திருத்திக்கொண்டு எங்களுடைய அணி சிறப்பாக விளையாடும்’ என்று பொல்லார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |