Categories
கிரிக்கெட்

“இங்க பாருப்பா கோலி தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க..!!” எச்சரிக்கை விடுத்த கவாஸ்கர்…!!

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது அல்ஜாரி ஜோசப் பவுன்சர் போட தொடங்கினார். அதனை கோலியால் எதிர்கொள்ள முடியவில்லை எனவே அதனைத் தவிர்த்து விட்டார் மீண்டும் பவுன்சரை எதிர்கொண்ட கோலி ப்ளிக் ஷாட் ஆட முற்பட்டு, பைன் லெக் திசை பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனை தொடர்ந்து கோலியின் இந்த செயல் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்,

அதில் அவர் கூறியதாவது, “தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் பவுன்சர்களை எதிர்கொண்டு கோலி ஆட்டம் இழந்தார்.தற்போது இந்த தொடரிலும் பவுன்சர்களை எதிர்கொண்டு ஆட்டம் இழந்துள்ளார். இந்த பிரச்சனையை போல் கோலி சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் இது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். கடினமான பகுதிகளை முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுங்கள் என அவர் கூறினார்.

Categories

Tech |