Categories
தேசிய செய்திகள்

மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூருக்கு செல்லவுள்ளார். திட்டமிட்டப்படி மோடி திஸ்பூருக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத் தலைவர் திபங்கா குமார் நாத் கூறுகையில், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி, ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா, இலங்கைக்கு இடையேயான டி20 போட்டி ஆகியவற்றை கூர்மையாகக் கவனித்துவருகிறோம். பிரதமர் மோடி வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

குடியுரிமை திருத்த மசோதா சட்டமான பிறகு பிரதமர் மோடி முதன்முதலாக வடகிழக்கு மாநிலத்திற்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த மாணவர் அமைப்பான அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பாதுகாப்பு முன்னதாகவே பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |