Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ரேஷன் அரிசியை வாங்கி விற்றால்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழக அரசு வழங்கக்கூடிய இந்த ரேஷன் அரிசியை சிலர் வாங்கி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை புழல் அரிசி வியாபாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இதைக் குறிப்பிட்ட அவர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்து வரும்போதும், நெல் அனுப்பி வைக்கும் போதும் தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |