Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்…. கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து வருண் அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இளம்பெண் கத்தி கூச்சலிட்டதால் அருண் தனது சகோதரருடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த தனது பெற்றோரிடம் இளம்பெண் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சகோதரர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து அருண் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அருணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |