Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட “ஆதார் கார்டு கட்டாயமில்லை”…. மத்திய அரசு அதிரடி….!!!

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில்  பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட மாட்டாது என்று கூறியதாக புகார்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து புனேவை சேர்ந்த வக்ககீல் சித்தார்த் சங்கர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் அம்மனுவில் மத்திய அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளும், நடைமுறை செயல்களுக்கும், நிறைய இருப்பதாகவும் அத்துடன் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டுவரச் சொல்லி அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை எனவும் பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களிடம் ஆதார் கார்டு கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்ததுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Categories

Tech |