Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியிடம் வீழ்ந்தது குஜராத் ஜெயன்ட்ஸ் ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.இதில் 36-31 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்  32-32 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதனிடையே இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா- பாட்னா பைரட்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Categories

Tech |