Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. இதை செய்தால் மட்டுமே அனுமதி… மத்திய அரசு….!!

தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதில் “சுற்றுச்சூழல் அனுமதி” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட முயற்சி செய்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்பி மேகதாது அணைக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இணை மந்திரி  அஸிவினி குமார் இவ்வாறு பதிலளித்துள்ளார். மத்திய அரசுக்கு கிடைக்கப்பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்குவதோடு சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு- கர்நாடகா இடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் எனவும் இந்த சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவாகரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள அமைச்சகம் திட்ட அறிக்கையை ஏற்ற பின்னே முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |