நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் விசிக எம்.எல்.ஏ. பாலாஜி கூறியபோது, நீட் தேர்வு என்பது ஒரு போட்டித்தேர்வு ஆகும். வெவ்வேறு பாடங்களை படித்தவர்கள் எப்படி இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியும். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வுக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பின் நிற்கிறது என்று கூறுகிறார்.