Categories
மாநில செய்திகள்

8 கோடி மக்களின் கருத்து…. ஆளுநர் அவமதிப்பு…. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்….!!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பேசியதாவது, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 8 கோடி மக்களின் ஒருமித கருத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.

Categories

Tech |