Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாக்கரில் வைத்த நகையைத் திருடியது யார்? – குழப்பத்தில் போலீஸ்!

கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை எடுக்க தாயார் லாக்கரை திறந்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகை திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மணிஷ்காரணி, திருடுபோன நகைகளை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கீழ்பாக்கம் குற்றப் பிரிவு காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை எப்படி திருடுபோனது என்பது குறித்து குழப்பத்தில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

Categories

Tech |