Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் தேர்வு: “கல்லூரிக்கு மாணவர்கள் நேரில் வரக்கூடாது”….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு வருகின்ற 10-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தேர்வுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே கல்வியியல் பல்கலை அறிவித்த அட்டவணைப்படி நடைபெறும். எனவே மாணவர்கள் ஆன்லைன் வழி தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் தேர்வு எழுதும் போது மாணவர்கள் கருப்பு நிற, “பால் பாய்ண்ட்” பேனாவை மட்டுமே விடைத்தாளில் பயன்படுத்த வேண்டும். கல்லூரிகளிலிருந்து நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் முறையாக பங்கேற்று தேர்வை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வரக்கூடாது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வினாத்தாள் கல்லூரியிலிருந்து ஆன்லைன் வழியில் அனுப்பப்படும்.

அதேபோல் 9.30 முதல் 10.30 மணி வரை பல்கலை இணையதளத்தில் வினாத்தாள் இடம்பெறும். தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் விடைத்தாளை ஒரு மணிநேரத்திற்குள் ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் ஆன்லைன் வழியாக கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும். அசல் விடைத்தாள்களை விரைவு அல்லது பதிவு தபால் மூலம் தேர்வுக்கான இறுதிநாள் அல்லது மறுநாளுக்குள் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |