Categories
மாநில செய்திகள்

“இதுக்கா இவ்வளவு பில்டப் பண்ணீங்க?”…. நயினார் நாகேந்திரனை விமர்சித்த அப்பாவு….!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ளார். அப்போது மசோதா மீது உறுப்பினர்கள் விவாதம் செய்து கொண்டிருக்கும்போது எழுந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமானம்படுத்தவில்லை என்று கூறினார். அதற்கு உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கப்படும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பேசுங்கள் என்று நயினார் நாகேந்திரனை பார்த்து அப்பாவு கூறினார். வெளியேபோக இவ்வளவு பில்டப்பா? போவதென்றால் போகலாம். இல்லையெனில் வரிசையாக பேசுங்கள் என்றும் கூறினார்.

Categories

Tech |