பாகிஸ்தான் நாட்டில் வேலையற்றோர் நடப்பு விகிதம் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி உள்ளனர். மேலும் பாகிஸ்தான் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீத இளைஞர்கள் வேலை இன்றி உள்ளவர்கள் தான். இதுகுறித்து அந்நாட்டு பொருளாதார முன்னேற்ற மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “வேலையற்றோர் நடப்பு விகிதம் 6.9 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் வேலை இன்றி 31 சதவிகித இளைஞர்கள் உள்ளனர். மேலும் அவர்களில் பலர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இதில் பெண்கள் 51 சதவிகிதமும், ஆண்கள் 16 சதவீதமும் உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.