ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அணிவகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமனில் கடந்த 5 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஆதரவோடு செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பெல்ட் ஃபேஸ் என்ற கிளர்ச்சியாளர் அமைப்பு சார்பாக இன்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டில் தெற்கு மாகாணமான தலைநகர் தெலேவில் நடந்த இந்த அணிவகுப்பு நிறைவடையும் தற்யுவாயில், திடீரென அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏவுகணைத் தாக்குதல் நடந்ததில் 10 பேர் உயிரிழந்தாகவும், பொதுமக்கள் உட்பட 21 பேர் காயமடைந்தவும் ஏமன் அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களே காரணம் என செக்யூரிட்டி பெல்ட் ஃபேஸ் தெரிவித்துள்ளது.