Categories
சினிமா தமிழ் சினிமா

கடவுளே…! “என்னோட எல்லா படமும் வெற்றி பெறணும்”…. பிராத்தனை செய்த பிரபல நடிகர்….!!!

நடிகர் அருண் விஜயகுமார் திருவண்ணாமலை கோவிலில் ரசிகர்களுடன் கிரிவலம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது நடிப்பாலும் திறமையாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களான சினம், அக்னி சிறகுகள், பார்டர், யானை, ஓ மை டாக் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி இருப்பதால் திருவண்ணாமலை கோவில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றும், தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து  அவர் தனது ரசிகர்களுடன் சேர்ந்து கிரிவலம் சென்றுள்ளார்.

Categories

Tech |