கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது.
கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது.
எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவைடைகின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.