கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். காவி நிற துண்டை அணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், 3 நாட்கள் (9,10,11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.