இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் கிறிஸ் சில்வர்வுட். இதில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக தொடரை இழந்தது . இதைதொடர்ந்து கிறிஸ் சில்வர்வுட் தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.