Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு முன்பு வந்து தகராறு செய்த தொழிலாளி…. வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இனாம்மணியாச்சி பகுதியில் கணேஷ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்துரை என்ற மகன் உள்ளார். இவர் வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அங்கையற்கண்ணி மகன் மாடசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மாடசாமி செல்லத்துரை வீட்டிற்கு முன்பு வந்து தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செல்லத்துரையை மாடசாமி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்லத்துரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |