Categories
விளையாட்டு கிரிக்கெட்

IPL: “இந்த அணிகளோட பேரு இதுதான்”… வெளியான அதிரடி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த 15 வது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ என்ற புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 2 அணிகளும் 3 வீரர்களை தக்க வைத்தல் மற்றும் பெயர் சூட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

அதன்படி லக்னோ அணி கே.எல் ராகுலை கேப்டனாகவும், ரவி பிஷ்னோய் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரை தக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத் அணியில் ஹார்த்திக் பாண்டியை கேப்டனாகவும், ரஷீத் கான் மற்றும் ஷூப்மன் கில் ஆகியோரையும் தக்கவைத்துள்ளது. இந்த அணிக்கு அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |