புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர்.
நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு நிலைக்கு இந்தியாவை மாற்ற விட முடியுமா? “பாரத் மாதா கீ ஜே” என சொல்ல தயாராக இருப்போர் மட்டும் இங்கு வாழலாம்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குடிமக்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு உள்ளபோது, இந்தியா விடுதலையடைந்து, 70 ஆண்டுகளாகியும், சரியான குடிமக்கள் கணக்கீடு ஏன் இல்லை? என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.