தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாளுக்கு நாள் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை டூ திருப்பதி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் ரூ.360 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இந்த பணிகள் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.