ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் துக்க வீட்டிற்கு ஆட்களை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் கயத்தாறுக்கு திரும்பினார். அப்போது நாற்கர சாலை திருப்பத்தில் வந்து கொண்டிருந்த போது ஆட்டோ டயர் திடீரென வெடித்ததில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குருசாமியின் உடலை கைப்பற்றி ஓயரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.