பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளுடன் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரமூர்த்தி குடித்துவிட்டு அதே பகுதியில் இருக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்.
இதுக்குறித்து உடனடியாக பேரூராட்சி அலுவலர் ரவிசங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கரமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.