Categories
தேசிய செய்திகள்

தந்தையின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஆதித்யா.!!

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் தனஞ்செய் முண்டே, நவாப் மாலிக், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட 36 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 32 நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |