Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் சாலை உள்பட மூன்று சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை யாரேனும் வாகனங்களில் எடுத்து செல்கிறார்களா என தீவிர சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக முள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் காரில் வந்துள்ளார். இதனையடுத்து அவரின் காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 88,650 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலர் ரேவதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |