Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி: சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு..!!

இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் 27ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பொருள்களை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தார், உள்பட 5 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு மொத்தம் 994 வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 170 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, மிகப்பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 80 மையங்களில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதியுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். தேர்தலின்போது 2,300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் சிசிடிவி மூலம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார்.

Categories

Tech |