Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் வழங்கப்படவில்லை?…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு ….!!

பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  காரியாபட்டி, ஆவியூர், அரச குலம், மாங்குளம், கம்பிக்குடி, சுருண்டு, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2018 முதல் 2020 வரை வெங்காய பயிர் காப்பீடு வழங்கப்படாத கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |