Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடமுழுக்கு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்…. பக்தர்கள் தரிசனம்…!!

குடமுழுக்கு திருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சந்தப்படுகை கிராமத்திலுள்ள பழமை வாய்ந்த சாந்த முத்துமாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆலயத்தின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. இதேபோன்று குட்டியாண்டவர், ஆஞ்சநேயர், சந்தான கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனாகிய சுப்பிரமணியன் ஆலயங்களிலும் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். மேலும் குடமுழுக்கு திருவிழாவையொட்டி பவளக்காளி, பச்சைக்காளி மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்துள்ளன. இதனை ஆச்சாள்புரம் ஆகமபிரிவினர் மற்றும் வேதசாலை பாடஆசிரியர் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்

Categories

Tech |