Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு….!!!!

கடந்த வருடம் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வை விலக்குவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ஆம் தேதி நீட் விலக்கு மசோதா பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று காலை சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழக அரசு தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |