Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல்…. எப்போது ரிலீஸ் தெரியுமா…???

விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய்யின் “பீஸ்ட்” படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, வெளிநாடுகள் என எடுக்கப்பட்டது. சமீபத்தில்  பீஸ்ட் படத்திற்காக சென்னையில் மால் செட்டிங் போடப்பட்ட புகைப்படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

சில நாட்களாகவே பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவராத நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் “அரபி குத்து பாடல்” பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக கூடும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. செய்தி வந்த பிரோமோ வீடியோவில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இருந்தனர். இந்த வீடியோவானது அனிருத் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அஜித் படமான விவேகம் படத்திற்கு வாங்கிய விருதுடன் அஜித்தின் போட்டோ இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |