சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், கட்டுமான தொழிலாளர்களாக ஒடிசா மாநில தம்பதியின் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதியினர் நேற்று தங்களது ஒன்றரை வயது குழந்தையுடன் மதியம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒன்றரை வயது குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகாரின்படி இந்த குழந்தையை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று ரயில் நிலையங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திள்ளனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குழந்தையை தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தையை ஏரியில் யாரவது வீசி விட்டனரா என்ற சந்தேகத்தில் தீயணைப்புத்துறையினர் அம்பத்தூர் ஏரியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.