தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை மலர்தூவி வரவேற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப் பொம்மைகள் அடங்கிய வேலுநாச்சியார் வாகன ஊர்தியை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. ரகுமான், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த வாகன ஊர்திக்கு அனைவரும் மலர் தூவி மரியாதையை செலுத்தி வரவேற்றனர். இதனை பார்ப்பதற்காக பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர்.