கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிணறு மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்யுள்ளது. இதனால் மம்சாபுரம் உள்ளிட்ட பல கிராமத்தில் அமைந்துள்ள கிணறுகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது . இந்நிலையில் இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் 1 1\2 ஆண்டுகள் வரை நீர் வற்றாது என விவசாயிகள் தெரிவித்துள்ளார். இப்பகுதிகளில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக விளையும் என்றும், எப்போதும் விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறியுள்ளனர்.