விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகல கூடிய சூழல் இருக்கும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களுடைய சிறப்பான பேச்சு வார்த்தையால் மற்றவரின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். நல்ல லாபம் இருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறக்கூடும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். இன்றைய நாள் மனம் மகிழும் கொள்ளும் வாய்ப்பு இருக்கும். வீதிகளுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழ்நிலையும் இருக்கும். காதலில் ஈடுபட்டவர்களுக்கு காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதாவது உடலில் வசீகரத் தன்மை கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழையுங்கள். விளையாட்டை தயவுசெய்து ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்