Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”வெற்றி நடை போடுவீர்கள்”.. செலவு கொஞ்சம் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று பணம் மழையிலும், பாச மழையிலும் நீங்கள் நனைய கூடும்.  தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.  வாகன பராமரிப்பு செலவு இருக்கும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று பிள்ளைகள் வழியில் செலவு கொஞ்சம் இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.

புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுக அனுபவம் ஏற்படும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான சூழல் இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் அன்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |