உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த 57 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரஞ்சித் என்பவர் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.