உத்தரபிரதேச மாநிலத்தில் வருகின்ற 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு,
* அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியமும் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
* 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கொண்டு வரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
* ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையைக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.