கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதிமுக சார்பில் மனு கொடுக்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது இதனை விசாரித்த நீதிபதி உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு மற்றும் உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மனு ஆகிய இரண்டு வழக்குகளிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த வழக்கை வருகிற மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.