Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “கடலில் கொட்டப்பட்ட மீன்கள்”… வெளியான வீடியோ…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அமைச்சரின் அதிரடி உத்தரவு….!!

பிரான்ஸில் உலகின் 2 ஆவது பெரிய மீன்பிடி படகிலிருந்து சுமார் 1,00,000 ப்ளூ வைட்டிங் என்னும் மீன்கள் கடலில் கொட்டப்படுவது தொடர்புடைய வீடியோ வெளியாகி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 2 ஆவது மிகப்பெரிய மீன்பிடி படகாக the margiris உள்ளது. இந்நிலையில் இந்த படகிலிருந்து இறந்த சுமார் 1,00,000 ப்ளூ வைட்டிங் என்னும் மீன்கள் கடல் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இது தொடர்புடைய வீடியோவும், புகைப்படமும் வெளியாகி அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெரிய படகுகளில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை மட்டும் எடுத்துவிட்டு மற்றவைகளை மீண்டும் கடலிலேயே போட்டு விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து அந்த படகின் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அது ஒரு விபத்து வலை கிழிந்ததால் தான் கடலில் மீன்கள் கொட்டப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க அந்நாட்டின் கடல் வளத் துறை அமைச்சரான Annick உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |