Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG : இந்திய U-19 அணி… 2 முறை கோப்பை வெல்ல இவர் தான் காரணமா?…. வைரலாகும் பெயர்….!!!!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்திய இளம் படை துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி ஆகிய சுற்றுகளில் அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ராஜ் பவா, ரவிக்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்தனர்.

இதனால் 189/10 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. இதையடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 50 ( 54 ), துணை கேப்டன் ஷேக் ராஷித் 50 ( 84 ) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 195/6 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5-வது முறையாக இந்திய அணி கோப்பையை தட்டி தூக்கியது. அதிலும் குறிப்பாக கடைசி 2 பந்துகளில் தினேஷ் பானா சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதாவது தோனி 2011-உலக கோப்பையில் சிக்ஸர் எடுத்து உலக கோப்பையை வென்று கொடுத்தது போல் இருந்துள்ளது. இதற்கு முன்பு கேப்டன் பிரித்வி ஷாதான் இந்திய U-19 அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். தற்போது உலக கோப்பையை கேப்டன் யாஷ் தூல் வென்று கொடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் இருவரின் கடைசி பெயர்களையும் இணைத்து இந்திய அணியின் உள்ள ஷார்துல் தாகுரின் பெயர்தான் வருவதாக கூறி வருகின்றனர்.

ஏனென்றால் இந்திய அணிக்கு முக்கியமான நேரத்தில் ஷார்துல் தாகுர் தான் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். எனவே இவரை ‘லார்ட்’ அதாவது ‘கடவுள்’ ஷார்துல் தாகுர் என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். அதன்படி பார்த்தால் இந்திய U-19 அணி கேப்டன் பிரித்வி ஷா, யாஷ் தூல் இருவருடைய பெயரின் கடைசி எழுத்துகளையும் இணைத்தால் ஷார்துல் தாகுர் பெயர் தான் அதாவது கடவுளின் பெயரை சேர்த்ததால் தான் 2 முறை கோப்பையை வென்று கொடுக்க முடிந்திருக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் இந்த பெயரை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Categories

Tech |